சிறுத்தையிடம் சண்டையிட்டு 3 வயது குழந்தையை காப்பாற்றிய தாய்..!!

Read Time:1 Minute, 51 Second

201703231427539144_sudden-heart-attack-what-to-do_SECVPFமும்பையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் சண்டையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

மும்பை, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவிற்கு அருகே உள்ள பகுதியில் வரௌபவர் பிரமிளா ரஞ்சித் (23) என்ற 3 வயது குழந்தையின் தாய் வசித்து வந்துள்ளார்.

இதன் போது சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த்த பிரமிளா பயத்தில் ஓடியுள்ளார். அவருக்கு பின்னால் அவருடைய 3 வயது மகன் பிரணாய் ஓடிவந்துள்ளார்.

இந்நிலையில் பின்னால் ஓடிவந்த 3 வயது மகனை தாக்கிய சிறுத்தை குழந்தையை காட்டுக்குள் இழுத்துச்செல்ல முயன்றுள்ளது.

குழந்தை சிறுத்தையிடம் சிக்கியது தெரியாமல் ஓடிய தாய், மகனின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், சிறிதும் தாமதிக்காமல் சிறுத்தை மீது பாய்ந்து சண்டையிட்டு குழந்தையை காப்பற்றியுள்ளார்.

எனினும், சிறுத்தை ஓடாத நிலையில் பிரமிளா பயங்கர கூச்சலிட அதை கேட்ட சிறுத்தை பயந்து ஓடியுள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவன் பிரணாய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வீடுதிரும்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்..!!
Next post உடலை உச்ச சூடேற்றும் செக்ஸ் நிலைகள்..!!