7 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலியான கோர விபத்து!! CCTV வீடியோ இணைப்பு..!!
Read Time:1 Minute, 23 Second
இந்தியா – கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற சிற்றூந்து மீது பாரவூர்தி மோதியதில் 7 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது.
அம்மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ளது ஐய்யப்பா பெண்கள் கல்லூரி நேற்று வழக்கம் போல கல்லூரி முடிந்தது.
அப்போது கல்லூரிக்கு சொந்தமான சிற்றூந்து ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த நிலையில், பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் 15 பேர் காயமடைந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating