இரண்டு கார்களுக்கு மத்தியில் நசுங்கிய பெண்: அசுர வேகத்தில் வந்த காரின் அதிர்ச்சி வீடியோ..!!

Read Time:2 Minute, 42 Second

625.0.560.320.500.400.194.800.668.160.90சீனாவில் இரண்டு கார்களுக்கு மத்தியில் பெண் ஒருவர் நசுக்கப்பட்டதால், அவர் தனது இரு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு சீனாவின் Shenzhen பகுதியில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுடைய கார்களை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் குறித்த நபர் காரில் வந்த போது, முன்னே சென்ற காரின் மீது மோதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்னே சென்ற காரில் இருந்த இருவர் உடனடியாக காரை விட்டு இறங்கி, பின்னே வந்த காரின் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஒரு பெண் காரின் முனையில் நின்று விளக்கிக் கொண்டிருந்த போது, மூன்றாவதாக பின்னே வந்த கார் அசுரவேகத்தில், நின்று கொண்டிருந்த காரின் மீது மோதியது.

இதனால் அந்த காரின் முனையில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கால்கள் நசுக்கப்பட்டது. பெரிதும் விபத்துக்குள்ளான அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தால் அந்த பெண் தன்னுடைய இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் முதலில் நடந்த விபத்தின் போது அவர்கள் ஒரு எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதை கவனிக்காமல் மூன்றாவதாக வந்த நபர் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், இதற்கு அடுத்த படியாக நடந்த விபத்தால், ஒரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அந்த பெண்ணிற்கான மருத்துவ செலவுகளை, விபத்து ஏற்படுத்திய நபர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எத்தியோப்பியாவில் பழங்குடியினர் இடையே நடைபெறும் விநோதப் போட்டி..!! (படங்கள்
Next post முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்..!!