உங்கள் முகத்தில் எண்ணெய் வழியுதா?… அப்ப இதோ இதப்படிங்க..!!

Read Time:2 Minute, 53 Second

201703301433104915_oil-face-control-tips_SECVPFஎன்னதான் சருமத்தைப் பாதுகாத்து வந்தாலும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிவது குறையவே குறையாது. அது கொழுப்புச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.

அதோடு, காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி, நான்கு மிளகு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது.

இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். நிறைய தண்ணீர் குடித்தால் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து வெளியேறும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், கேரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.

டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறட்சி அடையச்செய்து சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகத்தை கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள். முகம் கழுவ ஜான்சன் அண்ட் ஜான்சன், க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.

மேலும் களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஆயில் அதிகம் சுரப்பவர்கள் ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமசூத்திர தூண்டல்கள் – சுகமான விளையாட்டுக்கு..!!
Next post இந்த விளையாட்டை கொஞ்சம் பாருங்கள்..!! (கலக்கல் வீடியோ)