விரட்டி கடித்த சிங்கங்கள்..சர்க்கஸில் நடந்த பயங்கரம்: அதிர்ச்சி வீடியோ..!!
உக்ரைனில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, சிங்கங்களை வைத்து சாகசம் நிகழ்த்திய நபரை சிங்கங்கள் விரட்டி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் Lviv பகுதியில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான சாகசங்களை அவர்கள் நடத்தினர்.
அப்போது சிங்கங்களை வைத்து இரண்டு பேர் சாகசம் செய்தனர். இதில் மூன்றுக்கும் மேற்பட்ட சிங்கங்கள் இருந்தன.
அப்போது இரண்டு பேரில் ஒருவர் சிங்கத்தை கட்டுப்படுத்தி அங்கிருந்த மேஜையின் மீது ஏறி அதன் பின் கீழ் இறங்கும் படி கட்டுப்படுத்தி வந்தார்.
இதில் மற்றோரு நபரும் அதே வேலையைத் தான் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஆவேசமடைந்த சிங்கம் ஒன்று குறித்த நபர் ஒருவரை விரட்டி பிடித்து கடித்தது.
அதன் பின் அருகில் இருந்த மற்றொரு நபர் தாக்குதலில் ஈடுபட்ட சிங்கத்தை தான் வைத்திருந்த தடியை வைத்து அடித்து திசை திருப்பினார். அதைத் தொடர்ந்து அந்த சிங்கத்தின் மீது தண்ணீரும் அடிக்கப்பட்டது.
இதனால் திரும்பி சென்ற சிங்கம் மீண்டும் வந்து அந்த நபரை கடித்தது. ஒரு சிங்கம் அந்த நபரை கடித்தவுடன், மற்ற சிங்கங்களும் அவரை கடிக்க முற்பட்டது.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். திடீரென்று நடந்த இச்சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Average Rating