அந்த ஒரு வார்த்தைதான் சிம்புவுடன் காதல் முறிவுக்கு காரணம்- ஹன்சிகா..!!
சிம்புவை முதலில் காதலித்தவர் நயன்தாரா. இருவரும் “வல்லவன்” என்ற ஒரே திரைப்படத்தில்தான் நடித்தனர். அப்போது காதல் உருவாகி, அந்த திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் அவர்களது காதல் முறிந்து போனது.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கிடையே காதல் நீடித்தது. அதையடுத்து பிரிந்தனர். பின்னர், “வாலு” திரைப்படத்தில் நடித்தபோது ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. அந்த காதலும் அந்த திரைப்படத்தில் அவர்கள் நடித்துக்கொண்டிருக்கும்போது உருவாகி, திரைப்படத்தில் நடித்து முடிப்பதற்குள் முறிந்தது.
பின்னர், சில மாதங்களாக காதல் சோகத்தில் திரிந்த சிம்பு, பின்னர் ஆன்மீகத்தில் ஈடுபாடாகி காதலிகளை மறந்து விட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில், “தற்போது சிம்புவும், நானும் நல்ல ஜோடி. அவரை உண்மையாக காதலித்தேன். ஆனால், அவர் சொன்ன வார்த்தை என்னை அதிர்ச்சியடைய செய்து விட்டது. அதனால்தான் அவரை விட்டு பிரிந்தேன்” என்று, கூறியுள்ளார் ஹன்சிகா.
ஆனால், அவர் என்ன வார்த்தை சொன்னார் என்பதை வெளிப்படையாக சொல்லாத ஹன்சிகா, “எங்களது காதல் முறிந்து போனதற்கு நான் காரணமல்ல, சிம்புதான் காரணம்” என்று கூறியுள்ளார்.
Average Rating