உயிரோடு மண்ணில் புதைக்கபட்ட நபர்! ஏன்? அதிர்ச்சி வீடியோ..!!
தென் ஆப்பிரிக்காவில் திருடன் ஒருவரை மக்கள் மண்ணில் புதைத்து வைத்து கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள Mpumalanga மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடன் திருடுவதற்காக புகுந்துள்ளான்.
அவனை அங்கிருந்தவர்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். பின்னர் அந்த ஊர் மக்கள் மத்தியில் அவன் நிறுத்தப்பட்டுள்ளான்.
அங்கிருந்த மக்கள் அவனுக்கு தாங்களே தண்டனை தர முடிவெடுத்தனர். அதன்படி திருடனை மணல் பரப்பில் உட்கார வைத்து புதைக்க ஆரம்பித்தனர். அருகிலிருந்தவர்கள் மணலை அவர் மீது வீசினார்கள்.
இதனிடையில் மணல் திருடனின் கழுத்தளவுக்கு வந்தது. பின்னர் அவர் தன்னை உயிரோடு விட்டு படி அங்கிருந்தவர்களிடம் கெஞ்சியுள்ளார்.
பின்னர் பல மணி நேரம் கழித்து அந்த நபரை அங்கிருந்தவர்கள் விடுவித்துள்ளனர். உடலில் அவருக்கு காயங்கள் அதிகம் பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating