காப்பாத்துங்க! உயிருக்காக போராடிய பெண்ணை வீடியோ எடுத்த முதலாளி- பகீர் சம்பவம்..!! (வீடியோ)
குவைத்தில் 7வது மாடியிலிருந்து குதித்த பணிப்பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில், ஒரு பெண் 7வது மாடியிலிருந்து கீழே குதிப்பதற்காக தொங்குகிறார். பின்னர் பயத்தில் தன்னை காப்பாற்றுமாறு அருகிலிருந்த நபரை கெஞ்சுகிறார்.
ஆனால் அதை மதிக்காத நபர் அந்த பெண் கீழே குதிப்பதை வீடியோ எடுக்கிறார்.
அந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்பவர் என்பதும், அதை வீடியோ எடுத்தது வீட்டின் உரிமையாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
அங்குள்ள ஒரு வழக்கறிஞர் வீடியோ எடுத்த வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையில் கீழே குதித்த பெண்ணுக்கு கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating