முகத்துல சதை தொங்கி வயதான தோற்றம் தருதா இத செஞ்சு பாருங்க..!!

Read Time:5 Minute, 20 Second

முகத்துல-சதை-தொங்கி-வயதான-தோற்றம்-தருதா-இத-செஞ்சு-பாருங்கஇன்றைய காலத்தில் சுற்றுக்சூழலின் அதிகப்படியான மாசுபாட்டினால் தான் சிறு வயயதிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை தருகின்றது. அப்படி முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் இந்த காலத்து பெண்கள் அறுவை சிகிச்சையையும் மற்ற நவீன அழகு சாதனப்பொருட்களையும் பெரும்பாலும் நம்புகின்றனர்.

முட்டையின் வெள்ளைக் கருவில் அதிகப் படியான ஆன்டிஆன்ஸிடன்ட்கள் இருக்கிறது. அது நமது தோலின் தன்மையினை உறுதி செய்கிறது. நமது சருமமானது உறுதியாக நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் சுருக்கங்கள் ஏற்படாமல் இன்றைய சூழலுக்கு தகுந்தவாறு நன்றாக இருக்கும்.

அந்த முட்டையின் வெள்ளைக்கருவை பல்வேறு வகையாக நமது சருமத்திற்கு போடலாம். இங்கே அப்படிப்பட்ட சில வழிமுறைகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.

கேரட் ஜூஸூடன் முட்டை வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கருவை கேரட் ஜூஸூடன் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை உங்கள் முகத்தில் பரவலாக தேய்த்து உலர விட வேண்டும். பின்னர் நல்ல மிதமான தண்ணீரினால் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் காக்கும்.

ஓட்ஸூடன் முட்டை வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸை முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். அந்தக் கலவையை சருமத்தின் மீது பூச வேண்டும். சிறிது நேரம் அப்படியே விட வேண்டும். பின்னர், மிதமான சுடுநீரால் கழுவி விட வேண்டும்.

தேனுடன் முட்டை வெள்ளைக்கரு தேனுடன் கூடிய முட்டை வெள்ளைக்கரு சருமத்தை உறுதியாக மற்றும் இறுக்கமாக மாற்றி சுருக்கம் ஏற்படாமல் ஆரோக்கியமாக வைக்க உதவும். தேனையும் முட்டை வெள்ளைக்கருவையும் நன்கு கலக்கி முகத்தில் பரவலாக போட வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

தயிருடன் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன் தயிரை முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து முகத்தில் போட்டு வந்தால் சருமம் மிருதுவாக பொழிவுடன் இருக்கும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
கடலை மாவுடன் முட்டை வெள்ளைக்கரு கடலை மாவையும் முட்டை வெள்ளைக்கருவையும் ஒன்றாக சேர்த்து கலக்கி முகத்தில் போட்டு 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தான் செய்ய வேண்டும்.

முல்தானிமெட்டி பொடியுடன் முட்டை வெள்ளைக்கரு முல்தானிமெட்டி பொடியுடன் முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இந்த இயற்கை முறையினாலான வைத்தியத்தை வாரத்திற்கு ஒரு முறை செய்யுங்கள்.

ஆப்பிள் சிடர் வினிகருடன் முட்டை வெள்ளைக்கரு ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை சருமத்தின் மீது போட்டு சிறிது நேரம் கழித்து அது உலர்ந்தப் பின் மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவி விட வேண்டும்.

எலுமிச்சைச் சாறுடன் முட்டை வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விடுங்கள். இதனை செய்து வருவதால் சருமமானது மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாற்பது வயசு தாண்டியும் மனதை கொள்ளைகொள்ளும் தமிழ் நடிகைகள்..!! (வீடியோ)
Next post பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியை செய்த காரியம்..!!