ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகும் பூனம் பாஜ்வா..!!

Read Time:2 Minute, 12 Second

201704011255015767_Poonam-Bajwa-feature-a-lead-for-GV-Prakashs-next_SECVPFஇசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகராக தற்போது வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கைவசம், பல படங்கள் இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `புரூஸ் லீ’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், அவர் `ஐங்கரன்’, `4ஜி’, `அடங்காதே’ `செம’ உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதே நேரத்தில் தேசிய விருது இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிவுடன் இணைந்து `நாச்சியார்’ என்ற மாறுபட்ட கதைகளத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்’, சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார். ரஜினி நடிப்பில் 1979-ல் வெளியான `குப்பத்து ராஜா’ என்ற படத்தின் தலைப்பை, இப்படத்திற்காக படக்குழு கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார். `முத்தின கத்திரிக்கா’ படத்தை தொடர்ந்து பூனம் பாஜ்வா இப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆழமான புதைகுழியில் சிக்கிய 11 யானைகள்: 2 நாட்களுக்கு பின் மீண்டது எப்படி?,,!! (வீடியோ)
Next post வாஷிங் மெஷினுக்குள் சிக்கி கொண்ட 3 வயது சிறுமி: பகீர் வீடியோ..!!