இளவரசி டயானா மனநலம் பாதிக்கப்பட்டவரா? வெளியான பகீர் தகவல்..!!
மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா தமது தேனிலவு பயணத்தின்போது அதீத மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும் அவருக்கு வேலியம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய எழுத்தாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தமது புதிய புத்தகத்தில் மறைந்த இளவரசி டயானா மற்றும் சார்லஸ் குறித்து இதுவரை உலகம் அறிந்திராத பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.
Prince Charles: The Passions And Paradoxes Of An Improbable Life எனும் அந்த புத்தகத்தில், இளவரசர் சார்லஸ் வேறொரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருப்பது குறித்த தகவலால் இளவரசி டயானா அதீத மன உளைச்சலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸ் ஆகியோர் மன நல சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இளவரசி டயானா முன்னர் ஒருமுறை தமக்கு அதீத மன அழுத்தம், தீவிரமான பதட்டம் உள்ளிட்ட நோய்கள் இருப்பதை ஒப்புக்கொண்டிருந்தார். இதை Andrew Morton என்பவர் தமது புத்தகத்திலும் விரிவாக எழுதியிருந்தார்.
ஆனால் அதிரவைக்கும் வகையில், தற்போது வெளிவந்திருக்கும் புதிய புத்தகத்தில், சார்லஸ் டயானா தம்பதிகளின் திருமணத்திற்கு பின்னர் மேற்கொண்ட தேனிலவு பயணத்தின் போதும் இளவரசி டயானாவுக்கு அதீத மன அழுத்தம், தீவிரமான பதட்டம் உள்ளிட்ட அறிகுறிகள் தீவிரமாக காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
பால்மோரல் கோட்டையில் தங்கியிருந்த போது அதீத மன அழுத்தம் காரணமாக இளவரசி டயானா உடைந்த கண்ணாடி துண்டுகளாலும் ரேசர் கத்திகளாலும் தம்மை கிழித்து படுகாயப்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் தேனிலவு நாட்களில் தமது புதுமண கணவரின் முன்னிலையில் வைத்து அரங்கேறியுள்ளதாக குறித்த எழுத்தாளர் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் சார்லஸ் வேறொரு பெண்ணை காதலிப்பதை அறிந்த பின்னரல்ல இளவரசி டயானாவுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என தெளிவு படுத்தும் ஆய்வாளர்கள், இளவரசர் சார்லசுடனான திருமணத்திற்கு முன்னரே டயானா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றனர்.
காமிலா பார்க்கருடனான உறவை முறித்துக் கொள்ளும் வகையில் இளவரசர் சார்லஸ் அவுஸ்திரேலியா செல்லவிருந்த நாளில் தாம் மிக அதிகமாக அழுது தீர்த்ததாக திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் இளவரசி டயானா தெரிவித்திருந்தார்.
புத்தகத்தின் ஒரு பகுதியில், டயானாவின் நிலை அறிந்து சார்லஸ் மிகவும் வருந்தியதாகவும் அவருக்கு தேவையான மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் அவர் தயாராக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி டயானாவுடனான தமது உறவு நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வருவதையும் இளவரசர் சார்லஸ் அறிந்தே வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்துள்ள பல்வேறு நெருக்கடிகளுக்கு முடிவில் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி டயானா உடனான திருமண உறவை இளவரசர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating