தாய், மகனை கொடூரமாக கொலை செய்த பிச்சைக்காரர்: அதிர வைக்கும் சம்பவம்..!!

Read Time:3 Minute, 33 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானிய நாட்டில் தாய் மற்றும் மகனை கொலை செய்த பிச்சைக்காரர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள Stourbridge நகரில் Peter(47) மற்றும் Tracey(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இருவரும் Lydia(18) என்ற மகள் மற்றும் Pierce(13) என்ற மகனுடன் ஆடம்பரமான வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

தாயார் மிகவும் இரக்க குணமுடையவர் என்பதால் உதவிக்கு வருபர்களுக்கு பணம் கொடுத்து உதவுவார்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு Aaron Barley(23)) என்ற பிச்சைக்காரர் தெருவில் படுத்து உறங்கிக்கொண்டு இருப்பதை பார்த்துள்ளார்.

தற்காலிகமாக அவருக்கு தாயார் உணவளித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இது பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

நபர் மீது அதிகப் பாசம் கொண்ட தாயார் தனது கணவரிடம் கூறி சுமார் 30 மைல்கள் தொலைவில் ஒரு வீடு ஒன்றை ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர்.

நபருக்கு கணவர் ஒரு வேலையையும் ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளார். இதனால் பிச்சைக்காரரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று காரில் தாயார், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் லேண்ட் ரோவர் காரில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, வீட்டுக்கு வெளியே அந்த முன்னாள் பிச்சைக்காரர் காத்துக்கொண்டு இருந்துள்ளார்.

கார் வீட்டின் முன்பு நின்றவுடன் காரில் இருந்து மூவரும் இறங்கியுள்ளனர். அப்போது, மூவரும் மீது திடீரென பாய்ந்த நபர் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த தாயார் மற்றும் மகன் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

படுகாயம் அடைந்த தந்தை அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவர் இறந்துவிட்டார் எனக் கருதிய கொலையாளி காரைத்திருடிக்கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், பரபரப்பான இந்த தருணத்தில் கார் ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தாக்குதல் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிசார் உயிருக்கு போராடி வந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சில மணி நேரத்திற்கு பிறகு கொலையாளியும் கைது செய்யப்பட்டார். எனினும், தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை.

நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிணத்திற்க்கு லிப் கிஸ் கொடுத்த நித்தியானந்தா… அதன் பிறக்கு நடக்கும் காமிடி கலாட்டா..!! (வீடியோ)
Next post காதலியின் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம்..!!