உடல் சூட்டால் உருவாகும் சளி..!!

Read Time:4 Minute, 10 Second

201704030929197830_Body-heat-formed-by-cold_SECVPFநம் உடலில் வியர்வை என்பது எப்படி ஒரு கழிவுப்பொருளோ, அதைப் போலத்தான் சளியும் ஒரு கழிவுப் பொருள். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதனின் உடல் சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நமது வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகியவற்றில், ஒரு உட்பூச்சு கொடுத்தாற் போல் அமைந்துள்ளன. மேலும் பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகின்றன.

சளியில் பாக்டீரியா வைரஸ்களை, நம் உடல் கண்டு கொள்வதற்காக ஆன்டிபயாடிக், நொதிகள், புரதங்கள், பல்வேறு உயிரணுக்கள் நிறைந்து இருக்கின்றன. இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களை ஜீரணம் செய்யும் சக்தி நமது உடலுக்கு உண்டு. ஆனால் ரசாயனப் பொருட்கள் நிறைந்த உணவுகளை நாம் உட்கொள்ளும் போது, உடல் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் வேளையில் தான், அது சளியாக உருமாறுகிறது.

அதாவது உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளாக வெளியேறுகிறதோ, அதைபோலத்தான் சளியும் ஒரு கழிவுப்பொருளாக வெளியேறவேண்டும். ஆனால் சளி வந்தவுடன் நாம் அதனை வெளியேற்ற நினைக்காமல் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு உள்ளேயே தக்க வைத்துக்கொள்கிறோம். இதன் காரணமாக அது அப்படியே இறுகிப்போய் கட்டியாக மாறி நுரையீரலில் படிகிறது.

இதை நம் உடலில் இருந்து வெளியேற்ற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும், நமது உள்ளுறுப்புகள் முயற்சி செய்கின்றன. இதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது நாம் உட்கொள்ளும் உணவு தான்.

இயற்கையான முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறைகளில் சளி ஏற்படுகிறது, உடல் சூடானாலும், உடல் குளிர்ச்சியாக இருந்தாலும் சளி உருவாகும். உடல் சூட்டால் உருவாகும் சளி, மூக்கு வழியாக வெளியேறாது, இது தொண்டைக்கும், மூக்குக்கும் இடையே இருக்கும். அப்போது வறட்டு இருமல் ஏற்படும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சளியை வாய் வழியாகத் தான் வெளியேற்ற வேண்டும்.

உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது உருவாகும் சளி, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த சளியை மூக்கு வழியாக வெளியேற்ற முடியும். இவ்வாறு உருவாகும் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமே தவிர, எந்த வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலை போக்க ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூரத்தையும் போட்டு கிண்ணத்தைச் சூடேற்றி எண்ணெய்யை மார்மீதும், முதுகுப்புறமும் தடவ சளி, இருமல் குறையும்.

சிறு குழந்தைகளுக்கு, சளி பிடித்து மூக்கடைத்துக் கொள்ளும் போது, சுத்தமான துணி அல்லது பஞ்சு கொண்டு, உப்பு கலந்த சுடுநீரை தொட்டுத் துடைத்தால், மூக்கடைப்பு நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்..!!
Next post மாணவி காதலிக்க மறுப்பு: சக மாணவன் செய்த கொடூர செயல்..!!