வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர் கைது: 2 பெண்கள் மீட்பு..!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பிச்சாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கார்த்தி நேற்றுஇரவு வெட்டுக்காட்டு வலசு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் கார்த்தியிடம் சென்று “எங்கள் வீட்டில் இரண்டு பெண்கள் உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம்” என்றனர்.
பின்னர் ஒரு காரில் கார்த்தியை ஏற்றி கொண்டு சென்றனர். இதற்கிடையே கார்த்தி இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு ரகசியதகவல் கொடுத்தார்.
வெட்டுக்காட்டு வலசு அடுத்த நாளித்தோட்டம் என்ற இடத்தில் வீட்டில் கார் நின்றது. அங்கு 2 பெண்கள் இருந்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும், ஒருபுரோக்கரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட புரோக்கர் மதுரை மாவட்டம் கெட்டாரம் பகுதியை சேர்ந்த கணேசன் (24) என தெரியவந்தது. மற்ற இருவர்கள் போலீஸ் வருதற்கு முன் வெளியே சென்று விட்டதால் தப்பினர்.
விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கோயம்புத்தூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டடனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating