நடிகை நந்தினியின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை..!!

Read Time:2 Minute, 13 Second

201704041244043395_Actress-nandhini-husband-karthikeyan-suicide_SECVPFநடிகை நத்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். `வம்சம்’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நந்தினி. மேலும் ஒருசில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவருக்கு, திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தியாகராய நகரில் உடற்பயிற்சிக் கூடம் வைத்துள்ள கார்த்திகேயன் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமான தருணத்திலேயே இவர்கள், இருவருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நந்தினி தனது கணவர் கார்த்திகேயனுடன், வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று தனது வீட்டின் அருகாமையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கிய கார்த்திகேயன், அந்த விடுதியிலேயே குளிர்பானத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெகுநேரமாகியும் விடுதியில் அவரது அறை திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வந்து பார்த்த போது, வாயில் நுரைதள்ளிய படி கார்த்திகேயன் பிணமாகக் கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)
Next post மூன்று கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: உணர்ச்சிவசப்பட்டு பேசிய தாய்..!! (வீடியோ)