நடிகர் சங்கத்துக்காக மீண்டும் இணையும் விஷால்- கார்த்தி?..!!
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால்-கார்த்தி ஒரே அணியில் நின்று வெற்றி பெற்றனர். நடிகர் சங்கத்துக்காக புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து, அதில் வரும் பணத்தை நடிகர் சங்கத்தின் கட்டிடத்துக்காக கொடுக்கப்போவதாகவும் கூறினர்.
அதற்கான நேரம் தற்போது கைகூடி வந்துள்ளது. அதாவது, விஷாலும் கார்த்தியும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘வனமகன்’ படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் – கார்த்தி இருவரும் இணைவது உறுதியாகிவிட்டாலும், இவர்கள் இணைவது நடிகர் சங்கத்திற்குதானா? என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating