காதலனை கொடூரமாக கொலை செய்த காதலிக்கு ஆயுள் தண்டனை..!!
அர்ஜெண்டினா நாட்டில் காதலனை கட்டிபோட்டு கொடூரமாக கொலை செய்த காதலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அர்ஜெண்டினாவில் உள்ள Buenos Aires நகரில் Paula Romano(34) என்ற பெண் வசித்து வந்துள்ளார். ஏழையான இவர் Julio Cesar Vittoria(62) என்பவரின் ஆதரவுடன் வாழ்க்கையை நடத்தியுள்ளார்.
சில மாதங்களில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலும் உண்டாகியுள்ளது. பெண்ணிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நபர் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு யூலை மாதம் மதுபோதையில் இருந்த தனது காதலனை பெண் நாற்காலியில் கட்டிப்போட்டுள்ளார்.
காதலனின் ஆடைகளை நீக்கிய பெண் அவருடன் காதல் லீலைகள் ஈடுப்பட்டுள்ளார். பின்னர், கத்தியை எடுத்து நபரின் உடலில் 20 இடங்களில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
காதலன் இறந்து விட்டதை உறுதி செய்த அப்பெண் வீட்டில் இருந்த 1,045 பவுண்ட் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
தந்தையின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.
சுமார் 15 மாதக்காலமாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பிறகு பெண் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையில் காதலனை கொலை செய்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
மேலும், பணத்திற்காக உதவி செய்த நபரை கொலை செய்தக் குற்றத்திற்காக பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Average Rating