தல பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வரும் அஜித்- ஷாலினி..!!
சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரை `விவேகம்’ படத்தின் மூன்று மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ள படக்குழு, அஜித் பிறந்தநாளில், அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக படத்தின் டீசரை மே 1-ல் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் பிறந்தநாளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே, அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். அவ்வாறு அஜித் பிறந்தநாளில் டீசர் வெளியானால், அஜித் ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாகும்.
அதுமட்டுமல்லாமல், கடந்த 1999-ல் சரண் இயக்கத்தில் வெளியான `அமர்க்களம்’ படத்தை அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக மீண்டும் திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. அஜித்-ஷாலினி இணைந்து நடித்த படம் என்பதால், தல ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்ற நோக்கத்தில் மீண்டும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அஜித் பிறந்தநாளான வருகிற மே 1-ஆம் தேதி இப்படத்தை மீண்டும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மே 1-ல் `அமர்க்களம்’ மீண்டும் ரிலீசானால், அஜித்-ஷாலினி சேர்ந்து வைக்கும் விருந்தாக அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடுவர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் `வேதாளம்’ படத்தையும் மீண்டும் திரையிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
Average Rating