புகைபிடிப்போருக்கு சன்னிலியோன் அறிவுரை..!!
புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு. ஆயுள் குறையும், புற்று நோய்வரும் என்று டாக்டர்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். என்றாலும், இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்கள் திருந்துவது கடினமாகவே உள்ளது. அரசும் விளம்பரம் செய்து வருகிறது. அதற்கு எதிர்பார்க்கும் அளவு பயன்கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
இந்த நிலையில், புகைபிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வீடியோவை இந்தி நடிகை சன்னிலியோன் நடித்து வெளியிட்டுள்ளார். அதில் அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரு வாலிபர் மரணபடுக்கையில் இருக்கிறார். அவர் சன்னிலியோனை பார்க்க ஆசைபடுகிறார்.
அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற சன்னிலியோனை அவரிடம் அழைத்து வருகிறார்கள். அந்த வாலிபரை சன்னி தனது விரலால் தொடுகிறார். உடனே அவர் இறந்து விடுகிறார்.
“புகைபிடிக்கும் பழக்கத்தால் உயிர் தான் போகும்” என்று அந்த வீடியோ முடிகிறது. புகைக்கு எதிராக தான் கொடுத்த குரலுக்கு பலன் கிடைக்கும் என்று சன்னிலியோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
Average Rating