பாவனா வரிசையில் மீண்டும் ஒரு நடிகை கடத்தல்: பின்னணியில் அனிருத்..!!
நடிகை மற்றும் மாடலுமான அர்ச்சனாவை ஐந்து பேர் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சனா கௌதமுக்கு (22) சமூக வலைதளம் மூலம் அனிருத் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.அவர் அர்ச்சனாவிடம் ஜவுளிக்கடை விளம்பரத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அனிருத் வெளிய அழைத்துள்ளார்.
50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கித்தருவதாக கூறிய அனிருத் குறிப்பிட்ட இடத்திற்கு அர்ச்சனாவை வரச்சொல்லி இருக்கிறார்.அங்கு அர்ச்சனா போகும் போது நான்கு பேருடன் காத்திருந்த அனிருத் அர்ச்சனாவை காரில் ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்றும், உன் மீது விபச்சார வழக்கு தொடருவோம் என்றும் அர்ச்சனாவை மிரட்டியுள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாக கூறியுள்ளனர்.
அர்ச்சனா தன் அண்ணனுக்கு அழைப்பை மேற்கொண்டு செய்து நடந்த விஷயத்தை சொல்ல, அவர் பணத்தை எடுத்துக்கொண்டு விமான நிலையம் அருகில் வருவதாக கூறியுள்ளார்.
அனிருத் தனது கும்பலுடன் விமான நிலையம் சென்று காரை நிறுத்தும் போது அர்ச்சனா காரில் இருந்து கூச்சல் எழுப்பியுள்ளார்.
இதனை கண்ட பொதுமக்கள் அர்ச்சனாவை காப்பாற்றி நான்கு இளைஞர்களில் ஒருவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது அனிருத் உள்ளிட்ட மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
Average Rating