பெண்களில் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது?..!!
பெண்களின் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுவது எது என்பதைப் பற்றி பல ஆண்டுகளாக பல அனுமானங்கள் நிலவி வருகின்றன, பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட நேர அளவிற்கு பாலியல் கிளர்ச்சி அடைந்திருந்த பிறகே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது, ஆனால் குறிப்பாக எந்தத் தூண்டுதல் அந்தப் புணர்ச்சிப் பரவசநிலையைத் தூண்டுகிறது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பிறப்புறுப்புப் பகுதியில் தூண்டுதல்களை ஏற்படுத்துவதன் மூலமும் பெண்களை புணர்ச்சிப் பரவசநிலை அடையச் செய்ய முடியும், பிறப்புறுப்பு அல்லாத மற்ற பகுதிகளைத் தூண்டுவதன் மூலமும் முடியும்.
பெரும்பாலும் புணர்ச்சிப் பரவசநிலையை ஏற்படுத்துவதற்கு தூண்ட வேண்டிய முக்கியமான பகுதிகள் கிளிட்டோரிஸ் மற்றும் பிறப்புறுப்பு ஆகியவையாகும். ஆனால் சிறுநீர்ப் பாதைப் பகுதி, மார்பகங்கள்/முலைகள் அல்லது பிறப்புறுப்பைச் சுற்றிலும் உள்ள இடுப்புப் பகுதிகளில் தூண்டுவதாலும் பெண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றன.
வெளியிடப்பட்ட சில அறிக்கைகளில், பிறப்புறுப்பு சார்ந்த எந்தத் தூண்டுதலும் இல்லாமல், மனதில் காட்சிப்படுத்திப் பார்த்தல் முறை அல்லது உடலுறவு செய்வதாகக் கற்பனை செய்யும் முறை அல்லது ஹிப்னாடிச முறையிலும் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்தது பற்றி பெண்கள் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளனர்.
பாலியல் ரீதியாக எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாகவே புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் நிகழ்வுகள் பற்றியும் தகவல்கள் உள்ளன, ஆனால் இது அரிதான நிகழ்வாகும்.
கிளிட்டோரிஸ் பகுதியை நேரடியாகத் தூண்டுதல் (கிளிட்டோரிஸ் பகுதியைத் தொடுதல் அல்லது தட்டுதல்), கிளிட்டோரிஸ் பகுதியை மறைமுகமாகத் தூண்டுதல் (ஆணுறுப்பு அழுத்தும்போது கிளிட்டோரிஸ் பகுதி மறைமுகமாகத் தூண்டப்படுதல்), பிறப்புறுப்பில் (விரல் அல்லது ஆணுறுப்பைக் கொண்டு தேய்த்து) தூண்டுதல், கருப்பை வாய்ப் பகுதியைத் தூண்டுதல் (கருப்பையின் கீழ் விளிம்பை ஆணுறுப்பு அல்லது விரலால் தட்டுதல்) போன்ற முறைகளில் பெண்கள் புணர்ச்சிப் பரவசநிலையை அடையலாம். அதே சமயம், ஒருபோதும் எந்த விதத் தூண்டுதலினாலும் புணர்ச்சிப் பரவசநிலை அடையாத பெண்களும் உள்ளனர்.
Average Rating