இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: அதிர்ச்சி வீடியோ..!!
ரஷ்யாவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து Belarusக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.
ரயில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது தண்டவாளத்தின் குறுக்கில் ஒரு நபர் திடீரென வந்துள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுனர் வேகமாக பிரேக்கை அழுத்தியுள்ளார்.
அப்போது அவர் கட்டுபாட்டை இழந்த ரயில் தடம் புரள ஆரம்பித்தது. அப்போது பக்கத்து தண்டவாளத்தில் போய் கொண்டிருந்த ரயில் மீது இந்த ரயில் மோதியது.
இதில் பல ரயில் பொட்டிகள் தனியாக பிரிந்து சென்றன. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு அடிப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அடிப்பட்டவர்களில் 6 பேரின் நிலை கவலைகிடமாக உள்ளது. 200க்கும் மேற்பட்ட மீட்பு குழு வீரர்கள் 70க்கும் மேற்பட்ட இயந்திரங்களுடன் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Average Rating