எனக்கும் இயைராஜாவுக்கும் இடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்..!!

Read Time:1 Minute, 56 Second

201704110614102916_Time-will-solve-our-problems-says-SPB_SECVPFஅமெரிக்காவில் இசைக்கச்சேரியில் பிசியாக இருக்கும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயைராஜாவுடனான காப்புரிமை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காப்புரிமை பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே.

எனினும் இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன். மேலும் தனக்கு காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம் தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று தனக்கு தெரியாது.

எனினும் தங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. தனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் தன்னை பேசவிடாமல் தடுக்கிறது. எனினும் தங்களுக்கிடையேயான பிரச்சனையை காலம் தீர்த்து வைக்கும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ காப்பி படமா? படக்குழு விளக்கம்..!!
Next post கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி..!!