அமெரிக்க மன்மதனுக்கு 1300 பிள்ளைகள்! காட்டிக் கொடுத்த டி.என்.ஏ. பரிசோதனை..!!

Read Time:2 Minute, 48 Second

unnamed (11)தங்களின் உண்மையான தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்துத் தருமாறு இரண்டு இளைஞர்கள் அமெரிக்காவிலுள்ள ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகினர். அந்த நிறுவனத்தின் அதிகாரியும் அதற்கு ஒப்புக் கொண்டு துப்புத் துலக்க ஆரம்பித்தார். பல புலனாய்வுகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் டென்னிஸி (Tennessee – Nashville) மாகாணத்திலுள்ள நாஷ்வில் (Tennessee – Nashville) என்ற பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரர் ஒருவர்தான் அந்த இரு இளைஞர்களினதும் தந்தை என்பதைக் கண்டுபிடித்தார். இது நடந்தது 2001 ம் ஆண்டு.

இதனையடுத்து அந்தத் துப்பறியும் அதிகாரி மேலும் விசாரணைகளில் ஈடுபட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் அவருக்குக் கிடைத்தது. அந்தத் தபால்காரர் ஒன்றிரண்டு பிள்ளைகளுக்கல்ல, சுமார் 1300 பிள்ளைகளுக்குத் தந்தை என்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்காக அவர் நிறைய டி.என்.ஏ. பரிசோதனைகளை சலிக்காமல் 15 வருடங்களாக மேற்கொண்டு தான் கண்டுபிடித்த தகவலை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்தத் தந்தையையும் தேடிக் கண்டுபிடித்தார். அந்தத் தந்தையும் அதே நாஷ்வில் பகுதியைச் சேர்ந்தவர்தான் என்பதால் துப்பறியும் நிபுணருக்குத் தனது தேடுதல் மிகவும் இலகுவாகப் போனது.

ஆனால் 1300 பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த நபர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாகத் தலை நிமிர்ந்து பெருமையோடு பேசினார்.

”1960ம் ஆண்டுகளில் நான் பிரபல நடிகர்களை போல நல்ல அழகன். ஆண்மை நிறைந்த உடற்கட்டுடன் இருந்தேன். பெண்களைக் கவரும் வசீகரம் என்னிடமிருந்து. மேலும் அந்தக் காலத்தில் இந்தக் கருத்தடை, கருவழிப்பெல்லாம் பெரிதாக இருக்கவில்லை.”

அவர்தான் தமது தந்தை என்று இன்று பலரும் அறிந்து வருகிறார்கள். ஆனாலும், அந்த 1300 பிள்ளைகளில் எந்தப் பிள்ளையும் இதுவரை அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறையில் காவற்துறையினரை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது..!!
Next post மகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்..!!