பாலியல் தொல்லை பற்றி பேச பெண்கள் பயப்பட கூடாது: கங்கனா ரணாவத்..!!!

Read Time:1 Minute, 52 Second

201704121130137236_Women-should-not-afraid-to-talk-about-harassment-Kangana_SECVPFஇந்தி திரைப்பட இயக்குனர் விகாஸ் பால் மீது அவரது திரைப்பட நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி முன்னணி நடிகை கங்கனா ரணாவத்திடம் மும்பையில் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது:-

இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுபோன்ற சூழலை சந்திக்கும் பெண்கள், இதுபற்றி தைரியமாக பேச வேண்டும். இதனை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு நான் பேசவில்லை. ஏனென்றால், எனக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு கிடையாது.

பொதுவாக சொல்லப்போனால், இதுபோன்ற பாலியல் தொல்லைகளை சந்திக்கும் பெண்கள், இதனை தைரியமாக வெளியில் கொண்டு வர அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களை அவமானப்படுத்த கூடாது.

ஏராளமான பெண்கள் வெளியே வந்து, தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான், இதுபோன்ற பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயமாக, ஒவ்வொரு கதைக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும். எது சரி? எது தவறு? என்பதை தீர்மானிக்க அதிகார வர்க்கத்தினர் இருக்கிறார்கள்

இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வையை துடைக்காமல் விட்டால் வரும் பிரச்சனைகள்..!!
Next post ஆணுடம்பில் பெண்ணுக்குப் பிடித்த பாகங்கள்..!!