‘நாட்டாமை டீச்சர்’ நடிகையின் தற்போதைய நிலை..? என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..!!

Read Time:3 Minute, 30 Second

728x410_8929_love-333x250“நாட்டாமை டீச்சர்”-ன்னு மட்டுமில்ல “ஓ போடு’ன்னு சொன்னாலும் இவங்க தான் ஞாபகம் வருவாங்க. ஒரு நடிகை தன்னோட திறமையால், நடிப்பால், தன் பன்முக திறமையால் சமூக ஆர்வத்தால் புகழ்பெற்று பார்த்திருப்போம். ஆனால், “நாட்டாமை டீச்சர்”, “ஓ போடு” என வார்த்தையில் புகழ்பெற்ற ஒரே நடிகை இவர் தான்…

நாட்டாமை டீச்சர் என புகழ்பெற்ற இந்த நடிகை துணை நடிகையாகத்தான் படங்களில் வந்தார்.

பின்னர் கதா நாயகியாக அறிமுகமானது ராமராஜனின் வில்லுப்பாட்டுக்காரன் எனும் திரைப்படத்தில். அந்த படத்தில் ராணி என்ற பெயரில் அறிமுகமானார்.

ஆனால், இந்த படம் இவருக்கு அவ்வளவு பெரிய புகழை தேடித்தரவில்லை.

நாட்டாமை டீச்சர் பெரும் புகழ் பெற, இவரது கவர்ச்சி மட்டுமே காரணம் அல்ல.

சிற்பியின் அந்த மறக்க முடியாத பின்னணி இசை, கவுண்ட மணியின் நாட்டாமை தம்பி டீச்சர வெச்சுருக்காண்டா என்ற காமெடி காட்சிகள் போன்றவை தான் ரசிகர் மனதில் நாட்டாமை டீச்சர் கதாபாத்திரம் ஆழப்பதிய காரணமானது.

நாட்டாமை இந்தி ரீமேக்கிலும் இவர் தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இரண்டாவது படத்தில் விக்ரமுடன்தெலுங்கு படத்தில் ஜோடி சேர்ந்தார் ரக்ஷா. ஆனால், நடிப்பை விட கவர்ச்சி தான் தனக்கு நன்றாக வருவதாக கருதி, தொடர்ந்து கவர்ச்சி பாடல்களில், கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கினார்.

காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற வெள்ளரிக்கா, பிஞ்சி வெள்ளரிக்கா எனும் கானா பாடலில் இவர் நடனம் ஆடியிருந்தார்.

இந்த பாடலும் இவருக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பாடல்களில் இவர் நடனமாடினார்.

ஓ போடு… இதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமின் ஜெமினி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதிலும், ஓ போடு எனும் வசனத்தின் மூலமாக பிரபலமடைந்தார் ரக்ஷா. இதன் பிறகு தமிழகம் எனும் ஓ போடாத நபர்களே இல்லை எனலாம்.

விக்ரம் பின்னணி பாடிய “ஓ போடு” வருடத்தின் மெகாஹிட் பாடலானது.

திருமணம்….

இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இவர்களுக்கு தீக்ஷா எனும் குழந்தையும் இருக்கிறார்.

இப்போது கவர்ச்சி வேடங்களுக்கு நோ சொல்லும் நாட்டாமை டீச்சர், கதாபாத்திரம் ஏற்ற நடிக்க விரும்புகிறாராம். மேலும் இவர், சில படங்களை தயாரித்தும் வருகிறாராம் என கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் பெண்ணுடன் தவறான உறவு – சிறுவனின் ஆணுறுப்பு துண்டிப்பு..!!
Next post லண்டன் பேருந்தில் தாக்குதல் முயற்சி! திறமையாக முறியடித்த ஆப்பிரிக்கர்: பரபரப்பு வீடியோ..!!