வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் சிவாஜி பட நடிகை… நெஞ்சை உருக்கிய சம்பவம்…!!

Read Time:2 Minute, 4 Second

728x410_8955_jamunaசிவாஜிகணேசன், ஜெயலலிதா, சிவகுமார், சாவித்திரி ஆகியோர் நடித்த படங்களில் குரூப் டான்ஸராக நடனமாடியவர் ஜமுனா என்ற பெண்.

இவர் தற்போது வறுமையின் பிடியில் சிக்கி சென்னை வடபழனி கோவில் அருகே பிச்சை எடுத்து வருகிறார்.

இவரை சமீபத்தில் அணுகி ஒரு ஊடகம் பேட்டி எடுத்தபோது ஜமுனா கூறியதாவது:

எனக்கு 80 வயதாகிறது. ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’, சி ‘சரஸ்வதி சபதம்’, அவ்வையார் உள்பட பல படங்களுக்கு குரூப் டான்சராக இருந்துள்ளேன்.

என்னுடைய கணவர் மேக்கப்மேன். நடிகர்களுக்கு மீசை தாடி வைப்பது அவர்தான். நாங்கள் ஒருகாலத்தில் சென்னையில் சொந்த வீட்டில் வசதியாக வாழ்ந்தோம்.

ஆனால் வயதாக ஆக, எங்களால் வருமானம் செய்ய முடியாமல் போனதால் எங்கள் உறவினர்களால் ஒதுக்கப்பட்டேன். பூகட்டுதல் உள்பட பல வேலைகளை சில ஆண்டுகள் செய்தேன்.
இப்போது உடல்நலம் இல்லாததால் வடபழனி கோவில் அருகே பிறரிடம் கையேந்தும் நிலையில் உள்ளேன்.

விஷால் பல நடிகர்களுக்கு உதவி செய்துள்ளார் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்க செயலாளராக இருந்தபோதே பல நலிந்த கலைஞர்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றிய விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளதால் இந்த மூதாட்டிக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர்களே எச்சரிக்கை – இப்படியும் சில பெண்கள்..!! (வீடியோ)
Next post இன்றைய இளம் தலைமுறையினர் உடலுறவில் தோற்றுப்போவது ஏன் தெரியுமா?..!!