மதுபோதையில் மயங்கி கிடந்த பெண்: அத்துமீறி செயல்பட்ட அகதி..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் மயங்கி கிடந்த பெண் ஒருவரிடம் அத்துமீறி செயல்பட்ட அகதி ஒருவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் சுவிஸில் புகலிடம் கோரி தற்போது சூரிச்சில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற வாலிபர் முதன் முதலாக மது அருந்தியுள்ளார்.
பின்னர், வீட்டிற்கு திரும்பும் வழியில் 45 வயதான பெண் ஒருவர் நீண்ட இருக்கை ஒன்றில் படுத்திருப்பதை வாலிபர் பார்த்துள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு பெண் அரை மயக்கத்தில் இருப்பதை வாலிபர் கண்டுபிடித்துள்ளார்.
அப்பகுதியை சுற்றி யாரும் இல்லாத நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி செயபட்டுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த புதருக்கு சென்றுள்ளார்.
பின்னர், பெண்ணின் ஆடைகளை நீக்கியபோது பெண் எழுந்து சத்தம் போட்டுள்ளார்.
பெண்ணின் அலறலைக்கேட்டு வந்த சிலர் வாலிபரை பிடித்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர்.
இக்குற்றம் தொடர்பாக வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
மேலும், வாலிபருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனவும், தண்டனைக்கு பிறகு அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுதொடர்பாக உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. வாலிபரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக மாகாண அரசுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மற்றொரு 27 வயதான நபர் சுவிஸில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட காரணத்திற்காக அவரை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுவிஸ் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating