கார்த்தி, விஷாலின் ‘கறுப்புராஜா வெள்ளைராஜா’..!!

Read Time:2 Minute, 19 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா தயாரித்து இயக்கும் படம் ‘கறுப்புராஜா வெள்ளைராஜா’. விஷால்-கார்த்தி நடிக்கும் இந்த படத்தில் ஷாயிஷா நாயகியாக நடிக்கிறார். ஹாரிஷ்ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் தொடக்கவிழா சென்னையில் நடந்தது. இதில் பிரபுதேவா, விஷால், கார்த்தி, இயக்குனர் ஏ.எல்.விஜய், ஷாயிஷா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரபுதேவா பேசும்போது, “இது இரண்டு ஹீரோக்கள் கதை. விஷாலும், கார்த்தியும் ஒத்துக்கொண்டதால்தான் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் தொடங்குகிறது” என்றார்.

விஷால் “ நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் கொடுக்க முடிவு செய்தோம்.

இந்த படத்தில் இருந்து அதற்கான பணத்தை சேர்க்க போகிறோம். ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

கார்த்தி கூறும் போது, “இரண்டு நடிகர்கள் சேர்ந்து நடிப்பது எவ்வளவு பெரிய குழப்பம் என்பது எல்லோருக்கும் தெரியும். நெருக்கமான நண்பர்களாக இருந்தால் தான் இது நடக்கும்.

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் முன்பு நானும் விஷாலும் பேசிக் கொண்டது கூட இல்லை. அதன் பிறகு நிறைய பேசி இருக்கிறோம்.

விஷால், சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று 24 மணி நேரமும் உழைக்கிறார். இது இரண்டு நண்பர்கள் கதை. விஷாலுடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். எங்களிடையே எப்போதும் நட்பு இருக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் போது உயிரை விடும் உயிரினங்கள்..!! (வீடியோ)
Next post முதல்முறை உடலுறவு கொள்ளும்போது இந்த பொசிஷன்கள் மட்டும் ட்ரை பண்ணுங்க..!!