நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா..!!

Read Time:1 Minute, 10 Second

201704151110212950_SJ-Surya-next-joint-with-Nayanthara-director_SECVPFநயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘மாயா’. இப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடைந்த பெரிய வெற்றியைத் தொடர்ந்து, அஸ்வின் சரவணனுக்கு பட வாய்ப்புகளும் அதிகமாக வந்தது.

அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தை எஸ்.ஜே.சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இறவாக்காலம்’ என்று பெயர் வைத்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ஷிவதா, வாமிகா காஃபி ஆகியோர் நடிக்கின்றனர். ரான் யத்தன் யோகான் என்பவர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்து மேலும் புதிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி பெண்ணிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்ட நபர்: அதிர்ச்சி சம்பவம்..!!
Next post 100 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ரோலர் கோஸ்டர்: அந்தரத்தில் 24 உயிர்..!! (வீடியோ)