பழைய ரெயில் பெட்டியில் குடியிருந்த ஏழை சிறுமிகளுக்கு வீடு வழங்கிய மஞ்சுவாரியார்..!!
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியார். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற இவரது நல்ல குணம் இப்போது தெரியவந்துள்ளது.
கேரளமாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிபேடு என்ற பகுதி உள்ளது. இங்கு உள்ள பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் அர்ச்சனா, ஆதிரா என்ற குழந்தைகள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள், ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய ரெயில் பெட்டிகளில் பெற்றோருடன் தங்கி இருந்தனர்.
இந்த விவரம் மஞ்சு வாரியாருக்கு தெரிய வந்தது. வீடு இல்லாவிட்டாலும் வறுமையில் வாடினாலும் பள்ளி சென்று படிக்கும் அந்த சிறுமிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மஞ்சு வாரியார் நினைத்தார்.
இதற்காக தனது சொந்த செலவில் 5 சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்டி அந்த சிறுமிகளுக்கு மஞ்சுவாரியார் வழங்கினார். இதற்காக தனது நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு சிறுமிகளுக்கு வழங்கிய வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு அந்த குடும்பத்தினரை குதூகலிக்க வைத்தார். மஞ்சுவாரியாரின் இந்த மனது அவருக்கு பெருமை சேர்த்துள்ளது.
Average Rating