கன்னியர் மனங்கவரும் கல் வைத்த நகைகள்..!!

Read Time:5 Minute, 39 Second

201704150936515642_ladies-like-Stone-set-jewelry_SECVPFஇன்றைய நவீன மங்கையரும் சரி, சற்று வயதான பெண்மணிகளும் சரி கல் வைத்த நகைகள் அணிவது என்பது கொள்ளை பிரியம். அழகிய மஞ்சள் தங்க பின்னணியில் சிகப்பு, பச்சை, வெள்ளை போன்ற வண்ண கற்கள் பதித்த நகைகள் அணியும்போது அவர்களின் கவுரவமும், அழகும் கூடுகின்றன. எனவே, எத்தனை விதமான நகைகள் வைத்திருக்கும் பெண்களும் ஓர் கல் வைத்த நகை செட் இணைத்து வைத்திருப்பர். முந்தைய கால கல் வைத்த நகைகளில் அணிவரிசையை விட தற்கால கல் நகைகள் அணிவரிசை கூடுதல் பொலிவும், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தவாறு உள்ளன.

ஒவ்வொரு கல் வைத்த நகைகளும் தனிப்பட்ட வடிவமைப்பு, கல் பதிப்பு, இரட்டை கல் பதியபடுவது என அதிக பரவசத்துடன் உள்ளன. கல் பதித்த நகைகள் எனும்போது விலை உயர்ந்த ரூபி, எமரால்டு மற்றும் முத்து பதித்த நகைகளே பெண்களை அதிகம் கவர்கின்றன. இன்றைய நாளில் கல் பதித்த நகைகள் மதிப்பில் குறையவும் வாய்ப்பின்றி தங்கம் தனி விலை, கற்கள் தனி விலை என எடையுடன் பிரித்து விலைபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதுபோல் கல்பதித்த அன்றைய தங்க விலை, கற்கள் விலைக்கு ஏற்ப எடுத்து கொள்ளப்படுகின்றது.

செம்மை நிற ரூபி நகைகள் :

ரூபி கற்கள் விலை உயர்ந்தவை. இன்றைய நாளில் நவநாகரீக யுவதியர் அணிகின்றவாறு டைவெயிட் நகைகள் அழகிய ரூபி கற்கள் பதித்து விற்பனைக்கு வருகின்றன. நெக்லஸ், காதணி, வளையல் போன்றவை ரூபி கற்கள் பதித்தவாறு கிடைக்கின்றன.

ரூபி கல் பதித்த வளையல்கள் அழகிய வடிமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. அதாவது, இடைவெளிவிட்டு செம்மை நிற பூக்கள் மலர்ந்து இருப்பது மாதிரியான வடிவமைப்பில் வளையல் அற்புதமான கலைபடைப்பு. இதில், ஒவ்வொரு பூவிற்கும் நான்கு ரூபி கற்கள் பதியப்பட்டு நடுவில் மகரந்தமாய் தங்க அமைப்பு ஜொலிக்கிறது.

அதுபோல் பிரேஸ்லெட் அமைப்பில் அழகிய ரூபி வளையல் அதி அற்புதம். ஆம், அதில் இரு இலை கொத்துக்களின் நடுவே பெரிய மலர் மலர்ந்திருப்பது மாதிரி ரூபி கற்களால் டிசைன் செய்யப்பட்டு நடுப்பகுதி உள்ளது. அதன் சுற்று பகுதி உருவை வளையல் அமைப்பால் தோரணமாய் உருவாக்கப்பட்டுள்ளது.

வளையல்களில் ஒவ்வொரு கம்பி சிறு ரூபி கற்கள் பூவும் நடுப்பகுதியில் பெரிய பூ அமைப்பும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டுள்ளன. ரூபி கற்கள் பதித்த நெக்லஸ்கள் மெல்லிய வடிவில் சிறு நட்சத்திர பூக்கள், இலைகள், மணிகள் வரிசைப்படுத்தப்பட்டு நடுவில் தொங்கும் பகுதி பூக்கள், தோரண அமைப்பு, மயில்கள் நீள் சதுரம் அமைப்பு என்றவாறு முற்றிலும் ரூபி கற்கள் பதித்தவாறு கிடைக்கின்றன.

பசுமையான எமரால்டு நகைகள் :

எமரால்டு கல் பதித்த நகை பச்சை போர்வை போர்த்தியவாறு வருகின்றன. வெறும் பச்சை கற்கள் மட்டும் பதித்த நெக்லஸ்கள், வளையல்கள், ஆரம் போன்றவையுடன் ரூபி, எமரால்டு கற்கள் இணைந்த நகைகளும் உலா வருகின்றன. பெரிய ஆரங்களின் பதக்கம், கீழ்மணிகள் போன்ற எமரால்டு கற்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் வங்கி, வளையல்களில் பல வண்ண அமைப்பிற்கு பச்சை கற்களாய் எமரால்டு பயன்படுத்தப்படுகிறது.

எமரால்டு மணிகள் கொண்ட மாலைகள், காதணியில் பச்சை கல் பதித்ததும், தொங்கல்களும் கிடைக்கின்றன.

வெண் முத்து அலங்கார நகைகள் :

விலையுடன் கல் பதித்த நகைகள் எனும்போது வெண்முத்துகளும் அதில் அடங்குகின்றன. வெண்முத்து மாலைகளாக பெரும்பாலும் அணிந்தாலும் நல்ல முத்து பதித்த அலங்கார நகைகளும் கிடைக்கின்றன. நெக்லஸ், மாலை, வளையல், காதணி போன்றவைகள் முத்து பதித்தவாறு வருகின்றன.

முத்து மணிகள் இடையில் இணைந்தவாறு பட்டை வெயின் அமைப்பு நடுவில் மூவிதழ் பூ அமைப்பில் முத்துக்கள் கொண்ட பெரிய பதக்க அமைப்பு தொங்க விடப்பட்ட ஆரம் மனதை மயக்குகின்றன. அதுபோல் காதணிகளில் ஒற்றை பெரிய முத்துகளும், சிறுசிறு முத்து மணிகளும் இணைந்தவாறு உருவாக்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்..!!
Next post காதலனுடன் படுக்கையறையில்…. வீடியோவை வைத்து மிரட்டியதால் இளம்பெண் செய்த வேலை..!!