40 நிமிடங்கள் நின்ற குழந்தையின் இதயம்! பின்னர் செயல்பட்ட அதிசயம்: திக் திக் சம்பவம்..!!

Read Time:2 Minute, 15 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)பிரித்தானியாவில் ஆறு மாத குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு 40 நிமிடங்கள் செயலிழந்த இதயம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

பிரித்தானியாவின் Liverpool நகரை சேர்ந்தவர் Ged Thompson. இவரின் மகன் Buddy Thompson (6).

Buddy ஆறு மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அவன் இதயம் 40 நிமிடங்களுக்கு நின்று விட்டது. மருத்துவர்கள் எவ்வளோ முயன்றும் Buddyன் இதயத்தை செயல்படுத்த வைக்க முடியவில்லை.

அவன் நாடி துடிப்பும் நின்றிருந்தது, கடைசியாக ஒரு முறை செவிலியர் Buddyன் நாடியை பிடித்து பார்த்த போது அது லேசாக துடிப்பது தெரிந்தது.

பின்னர் எப்படியோ அவனின் இதயத்தை துடிக்க வைத்து மருத்துவர்கள் காப்பாற்றினார்கள்.

இது குறித்து Buddyன் தந்தை Ged கூறுகையில், இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து அவனுக்கு மீண்டும் பக்கவாதத்துடன் மாரடைப்பு வந்தது.

நான் என் வேலை விடயமாக அப்போது வெளியூர் போனதால் அவனருகில் நான் இல்லை.

பின்னர் மருத்துவர்கள் அவனை மீண்டும் காப்பாற்றினார்கள்.

நான் என் மகனை விட்டு வெளியூர் போகும் போதெல்லாம் அவனுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு விடுகிறது.

நான் அவனை பிரியவே கூடாது என அவன் உடல் நிலை மூலம் உணர்த்துவதாக எண்ணுகிறேன் என கூறியுள்ளார்

பின்னர் உடல் நிலை Buddyக்கு தேறிய நிலையில் தற்போது அவனுக்கு 6 வயதாகிறது.

அவனும் எல்லா சிறுவர்களை போல பள்ளிக்கு சென்று வருகிறான். Buddyன் தந்தை Ged தற்போது தன் மகனை பிரிந்து எங்கும் செல்வதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழகான தோற்றம் வேண்டுமா?..!!
Next post அமெரிக்க மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை! 15 பேரை நேரலையில் கொலை செய்த கொலையாளியின் வீடியோ…!!