விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட குரங்குகள்: பதறவைக்கும் காரணம்..!!

Read Time:1 Minute, 59 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இந்தியாவில் விவசாய பகுதிகளில் புகுந்து விளைச்சலை சாப்பிட்ட ஆத்திரத்தில் 30 குரங்குகளை விஷம் வைத்து கொன்றவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

அப்போது அங்கு ஏராளமான குரங்குகள் இறந்து கிடப்பதையும், சில குரங்குகள் உயிருக்கு போராடுவதையும் பார்த்த அவர்கள் இதுகுறித்து வனவிலங்கு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

வனத்துறையினர் வந்து பார்த்த போது 30 குரங்குகள் இறந்து கிடந்தன. உயிருக்கு போராடிய குரங்குகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் கூறுகையில், விஷம் கொடுத்து குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன.

சக்தி வாய்ந்த விஷம் என்பதால் மற்ற குரங்களை காப்பாற்றுவது கடினம் என கூறியுள்ளனர்.

அந்த பகுதியை சேர்ந்த லோகேஷ் என்னும் விவசாயி கூறுகையில், வனப்பகுதியில் உள்ள குரங்குகள் விளைச்சல் பகுதிகளில் நுழையும்.

பின்னர் குரங்குகள் விளைச்சலை சாப்பிடுவதால் ஆத்திரம் அடைந்த சிலர் அவற்றுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா..!!
Next post சாப்பிட்ட உடன் கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க..!!