வெயில் கால சரும பாதுகாப்பிற்கு…!!

Read Time:3 Minute, 30 Second

Banana-face-mask3பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இது விடுமுறைக் காலம்…! கோடை என்பதால் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அடிக்கடி செல்லமுடியாது. சதா சர்வகாலமும் டி.வி. முன்பும் தவம் கிடக்க முடியாது.
கோடை விடுமுறையை உபயோகமாக்கும் விதத்தில் உங்களுக்கு சில டிப்ஸ்கள் இதோ:

வெயிலில் அதிகமாக நடந்தால் உடல் கறுத்துவிடும், சருமம் சோர்வாகிவிடும் என்பது இன்றைய இளைஞர்களின் மனக்குறை. அதிலும் அழகு விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது இயற்கை என்பதால், அவர்கள் உடல் அழகை பராமரிக்க சில முயற்சிகளில் இறங்குவது வழக்கம்.

அவர்களுக்கு உதவும் விதத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும், முகம் பளபளப்பாகவும், அதில் கருப்பு-வெள்ளை புள்ளிகள் இருந்தால் நீங்கவும், முகச் சுருக்கங்கள் மறையவும், மனம் அமைதியாகி புத்துணர்ச்சி ஏற்பட உதவும் சிம்பிளான அழகுப் பயிற்சியை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

தயிர், வாழைப்பழம் அல்லது கொத்தமல்லி இலை இவைகளில் ஒன்று. இதில் எதை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெள்ளரிக்காயும் தேவை.
செய்முறை:
தலைமுடியை பின்பக்கம் இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். முகம் கழுவி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள். சிலருக்கு எண்ணை பிசுபிசுப்பு இருந்தால் “கிளென்சிங் மில்க்” மூலம் சுத்தம் செய்து தயாராகலாம். பின்னர், வாழைப்பழங்கள், தயிர் அல்லது கொத்தமல்லி இலை மசியலை முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். முகம் முழுவதும் பூசியபிறகு, நீங்களாகவே உங்கள் கைகளைக் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

15 முதல் 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். அதாவது கழுத்துப் பகுதியிலிருந்து ஆரம்பித்து மேல் நோக்கி செய்ய வேண்டும். இரண்டு காது ஓரங்களிலும், வாய்ப் பகுதியை சுற்றி ஓரங்களிலும் செய்யலாம். உதட்டின் மேல் கட்டைவிரலால் கீழிருந்து மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கின் ஓரங்களில் கீழிருந்து மேலாகவும், நெற்றியில் இரண்டு கைகளையும் கொண்டு மேல்நோக்கியும் மசாஜ் செய்யவும். பின்னர் இரண்டு வெள்ளரித் துண்டுகளை கண்களின் மேல் பத்து நிமிடத்துக்கு வைக்கவும்.
பின்னர் மிருதுவான பஞ்சு அல்லது துணியைக் கொண்டு நன்றாக துடைக்கவும். பின்பு குளிர்ந்த நீரில் நன்றாக முகத்தை கழுவி துடைத்தால் உங்கள் முகம் பளபளக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இச்சை மற்றும் பேராசை எண்ணங்களில் இருந்து வெளிவருவது எப்படி?..!!
Next post நாயுடன் பாலியல் உற­வு­ கொண்டு வீடி­யோவில் பதி­வு­ செய்த பெண்…!!