அதிகளவான செக்ஸ் ஆசையிலிருந்து இருந்து வெளிவருவது எப்படி?..!!

Read Time:3 Minute, 1 Second

timthumb-1-350x233இச்சை எண்ணங்கள் எழாமல் ஒருவர் வாழ்ந்திட முடியுமா? என்ற கேள்விக்கு 99% முடியாது என்ற பதில் தான் கிடைக்கும்.

இச்சை என்பது அனைவர்க்கும் எழக்கூடிய ஒரு எண்ணம் தான். ஆனால், நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா? அல்ல அந்த எண்ணம் நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா?

என்பது தான் முக்கியமான கேள்வி. இச்சை என்னத்திற்கு கட்டுப்பட்டு, வெளிவர முடியாமல் தவிர்க்கும் நபர்கள், அதிலிருந்து எப்படி வெளிவருவது என இங்கு காணலாம்…

ஏதாவதொரு வேலை!
இடைவிடாமல் உழைக்கும் வகையில் ஒரு வேலையை தேர்வு செய்யுங்கள்.அதில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் முனைப்புடன் செயலாற்றுங்கள். உங்கள் எண்ணம், ஆசை போன்றவை அதில் ஆழ்ந்து பயணிக்கும்படி செய்யுங்கள்.

ஆக்கப்பூர்வமான செயல்!
எழுதுதல், இசை, நடனம், ஓவியம், என கலை சார்ந்து, ஆக்கப்பூர்வமான செயல்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது மனதில் எழும் தீய எண்ணங்களும், இச்சை எண்ணங்களும் பொசுங்கிவிடும். இதை நீங்கள் தீவிரமாக பின்பற்றும் போது நன்கு காணலாம்.

இரவு வரை…
பகலில் நீங்கள் நன்கு உழைத்தால், இரவில் நல்ல உறக்கமும், மன நிம்மதியும் தான் கிடைக்குமே தவிர இச்சை எண்ணங்களோ, பேராசைகளோ உங்களை சூழாது, தொந்தரவும் செய்யாது. எனவே, பகல் நேரத்தில் உங்கள் வேலையில் மட்டுமே எண்ணத்தையும், கவனத்தையும் செலுத்துங்கள்.

20 முதல் 25 வரை…
இச்சை எண்ணங்களும், பேராசை குணங்களும் அதிகம் தோன்றுவதே இந்த 20 முதல் 25 வரையிலான இடைப்பட்ட வயதில் தான். எனவே, இந்த வயதில் நீங்கள் இந்த இச்சை எண்ணங்களை சரியாக கடந்து வந்துவிட்டாலே உங்கள் மனது தூய்மையாகவும், தெளிவாகவும் அமையும்.

ஹார்மோன்!
மேலும், குறிப்பாக, பதின் வயதில் ஆரம்பித்து இருபதுகளின் இறுதி வரை ஹார்மோன்கள் உங்களை தொந்திரவு செய்யும். நீங்களாகவே வேலைகளை எடுத்துக்கொண்டு இடைவிடாது உழைத்துக் கொண்டே இருங்கள். எண்ணத்தை திசைத்திருப்புவதை காட்டிலும், இதிலிருந்து வெளிவர சிறந்த வழி வேறேதும் இல்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்கு காத்திருந்த அதிர்சி..? 12 வயது மகள் மீது காதலன் வல்லுறவு..!!
Next post முகத்தில் வளரும் முடிகளை நீக்க இதை செய்திடுங்கள்..!!