இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா..!!

Read Time:1 Minute, 45 Second

201704191440551403_Youngster-dream-actress-alia-manasa-ambition_SECVPFமானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பிரபலமான ஐஸ்வர்யா ராஜேஷ். அவரைப்போலவே, அதே நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு வந்திருப்பவர் ஆலியா மானசா. சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தில் நாயகியாக நடித்த இவர், தற்போது வர்மாவுக்கு ஜோடியாக ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

திரை உலக லட்சியம் பற்றி ஆலியா மானசா கூறும்போது, ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நான் ஆடிய நடனம் தான் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தது. நான் நடித்த ‘ஜூலியும் 4 பேரும்’ படத்தில் நடனம் ஆட அதிக வாய்ப்பு இல்லை. சிறிய வாய்ப்புதான் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் எல்லா நாயகர்களும் பிடித்தவர்கள் என்றாலும் சிம்பு, சித்தார்த், கவுதம் கார்த்திக் ஆகியோர் எனக்கு அதிகம் பிடித்தவர்கள். இதுபோன்ற இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறேன். தமன்னா போல கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். ஆபாசமாக இல்லாமல் அழகாக ‘கிளாமரை’ வெளிப்படுத்துவேன். இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதை மனதில் வைத்து அதற்கு ஏற்ற கதையை தேர்வு செய்து நடிப்பேன் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாக்கு பையில் கட்டி…ரத்தம் சொட்ட சொட்ட சிறுமியை அடித்த கொடுமை- பதற வைக்கும் காட்சிகள்..!! (வீடியோ)
Next post நினைவுத்திறனை பாதிக்கும் சூயிங்கம்..!!