பழங்குடி இனத்தலைவர் பக்தி உடலை ராணுவமே அடக்கம் செய்தது உறவினர்கள் புறக்கணிப்பு

Read Time:4 Minute, 3 Second

Pakistan.map.1jpg.jpgபாகிஸ்தானில் பழங்குடி இனத்தலைவர் பக்தி கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. இஸ்லாமாபாத்,லாகூர் ஆகிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. பலுசிஸ்தான் மாநிலத்துக்கு சுயாட்சிவழங்கக்கோரி அந்தமாநிலத்தை சேர்ந்த பழங்குடிஇன மக்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. ராணுவ நடவடிக்கையில் பழங்குடி இனத்தலைவர் பக்தி அக்பர் கான் பலியானார். அவரது உடல் மீட்கப்பட்டது. 5 நாட்களாக மண்ணுக்குள் கிடந்ததால் அழுகியநிலையில் அது மீட்கப்பட்டது.

அந்த உடல் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு சொந்த ஊரான டெரா பக்திக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை யாரும் பார்ப்பதற்கு ராணுவம் அனுமதிக்கவில்லை.

உறவினர்கள் புறக்கணிப்பு

அவரது குடும்பத்தினரை இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் யாரும் வரவில்லை. இஸ்லாமிய மதகுரு ஒருவர் அழைத்து வரப்பட்டு அவர் சடங்குகளை செய்ய அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், பழங்குடி இன மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிகாரிகளும், ராணுவத்தினரும், குவெட்டாவில் இருந்து அழைத்துச்செல்லப்பட்ட பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.

ஒப்படைக்க மறுப்பு

பக்தியின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பக்தியின் மகனும் குடும்பத்தினரும் கேட்டுக்கொண்டனர். ஆனால் அரசாங்கம் அதற்கு மறுத்து விட்டது. ஒருவரின் உடலை அவரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக அடக்கம் செய்வது இஸ்லாத்துக்கு எதிரானது. அவரது குடும்பத்தினர் தான் அவரை எங்கே அடக்கம் செய்யவேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும் என்றும் பக்தியின் மருமகன் ஆகா ஷாகித் பக்தி கூறினார்.

பக்தியின் 2 மகன்கள் தலால், ஜமீல் ஆகியோர் உயிருடன் இருக்கும்போது அவர்களிடம் ஒப்படைக்காமல் அவரது எதிரிகளிடம் ஏன் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் கேட்டார்.
டெரா பக்தியில் அரசாங்கம் அடக்கம் செய்த உடல் என் தந்தையுடையதாக இருக்காது என்று பக்தியின் மகன் ஜமில் கூறினார்.

வேலை நிறுத்தம்

இதற்கிடையில் நேற்று பக்தி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதுமாக வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. அனைத்து கட்சி மாநாடு சார்பில் இந்த வேலைநிறுத்தம் நடந்தது. தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள கடைகள் மூடிக்கிடந்தன. பஸ் முதலிய வாகனங்கள் ஓடவில்லை.

நேற்றைய வெள்ளிக்கிழமையை கறுப்புதினமாக அனுசரிக்கும்படி எதிர்க்கட்சிகள் மக்களை கேட்டுக்கொண்டன. பலுசிஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் குவெட்டா ஸ்தம்பித்துப்போய் இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடற் புலிகளின் 12 படகுகள் கடற்படையினரால் நிர்மூலம்
Next post ஈரான் மீது தடை விதிப்பதற்கு ரஷியா எதிர்ப்பு