`வேலைக்காரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக், ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

Read Time:2 Minute, 4 Second

201704220625247044_New-update-on-Sivakarthikeyans-Velaikkaran_SECVPFசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்’ படத்தில் நடித்து வருகிறார். சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மலையாள நடிகர் பகத் பாஸில் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை, 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் சேரி போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜுன் 5-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் (செப்டம்பர் 29) -ல் படம் வெளியாக உள்ளதாக 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துணைக்கு துரோகம் செய்யும் மக்கள் வசிக்கும் நாடுகள் 7..!! (வீடியோ)
Next post செக்ஸ்’-‘எக்ஸ்ட்ரா’ சந்தோஷம் வேண்டுமா?..!!