தக்காளி, ஒரு பியூட்டீஷியனும் கூட..!!
புஸ்புஸ்” கண்ணங்கள் வேண்டுமா!
தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுங்கள். முதலில், முகத்தில் ஆலிவ் எண்ணெயைத் தடவுங்கள். அதன் மேல் இந்தக் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இரு முறை இப்படிச் செய்து வர அழகான கண்ணங்கள் கிடைக்கும்.
முகம் பளபளக்க!
தக்காளி விழுது, பாதாம் விழுது… தலா அரை டீஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவர, முக சுருக்கம் நீங்கி முகம் அழகாக மின்னும். மேலும் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது.
பேஷியல் ஸ்க்ரப்
உருளைக்கிழங்கு துருவல் சாறு – 1 டீஸ்பூன், தக்காளி விழுது – அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும், முகத்திலும் தடவி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணரமுடியும்.
ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்துபோய்முகம் பொலிவிழந்து விடும். அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப்.
முகம் சூரியனாகப் பிரகாசிக்க!
ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சிலருக்கு முகத்தில் மிருதுத் தன்மை மாறி, முரடு தட்டிப் போய்விடும். அவர்களுக்கான டிப்ஸ் இது.
தங்கம் போல் ஒளிவீச!
ஒரு தக்காளியை கூழாக்குங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்துக்குப் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் மிருதுவாகி, தங்கம் போல் ஒளிவீசும்.
கண்கள் பளிச்சென்று இருக்க!
ஒரு வெள்ளரித் துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள் இமைகளின் மேல் இந்தக் கலவையைப் பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்
சங்குக் கழுத்து போல் ஆக!
தக்காளி சாறு – அரை டீஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன், சமையல் சோடா – ஒரு சிட்டிகை… இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்தில் உள்ள கருவளையத்தின் மேல் பூசி, 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். வாரம் மூன்று முறை இப்படிச் செய்து வாருங்களேன். உங்கள் கழுத்து சங்குக் கழுத்து போல் ஆகிவிடும்!
Average Rating