என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா..!!

Read Time:2 Minute, 9 Second

201704221446596159_My-cinema-dream-has-come-full-Tamanna_SECVPF‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்களில் நடித்துள்ள தமன்னா அந்த அனுபவங்களை இப்படி சொல்கிறார்….

“ ‘பாகுபலி’ படத்தில் நடித்த பிறகு ஒரு நடிகையாக என் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. எந்த சவாலான காட்சிகளிலும் என்னால் நடிக்க முடியும் என்ற துணிச்சலை இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்துக்கு பிறகு எனது ‘இமேஜ்’ முழுவதும் மாறிவிட்டது.

இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் ஒரு கனவு போல இருக்கிறது. சண்டை காட்சிகளில் நடித்ததை மறக்கவே முடியாது. இன்னும் எத்தனை படங்களில் நடித்தாலும், ‘பாகுபலி’யில் நடித்தது என் மனதைவிட்டு அகலாது. திரை உலகில் எனக்கு ஒரு வித்தியாசமான பாதையை வகுத்துக்கொடுத்த இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

‘பாகுபலி-2’-ல் முதல் பாகத்தில் நடித்த அதே வேடம் தான் என்றாலும், இதில் அழுத்தமான கதை இருக்கிறது. ஒரு நடிகை என்பதையும் தாண்டி குதிரை ஏற்றம், சண்டை காட்சிகளில் நடித்தேன். இதற்காக அவற்றை முறைப்படி பயின்றேன்.

அனுஷ்கா, பிரபாஸ், சத்யராஜ் ஆகியோருடன் அதிக காட்சிகளில் நடித்திருக்கிறேன். எல்லோரும் என் நண்பர்கள். இந்த படத்தில் நடித்ததன் மூலம் என் சினிமா கனவு நிறைவேறிவிட்டதாக நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு படம் எடுப்பது சிரமம். இதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். அதை சரியாக பயன்படுத்தி இருப்பதாக நினைக்கிறேன். ‘பாகுபலி’ படத்துடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொர்க்கத்தின் புகைப்படங்களை வெளியிட்டது நாசா! அதிசய உலகத்தின் அழகு..!!
Next post ஒரே குரலில் பேச முடியாத ‘தேசிய அரசாங்கம்’..!! (கட்டுரை)