உலகின் முன்னணி கோடிஸ்வரரான பில் கேட்சின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!
உலகின் முதல் கோடீஸ்வரரான பில் கேட்ஸ் தனது பிள்ளைகளை 14 வயதை அடையும் வரை தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான பில்கேட்ஸ் தனது பிள்ளைகளை 14 வயதின் பின்னர் ஸ்மார்ட் கையடக்க தொலைப்பேசி பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். எனினும் தொலைப்பேசிகளுடன் பிள்ளைகள் செலவிட நேரம் தொடர்பில் எல்லை ஒன்றை விதிக்கவுள்ளார்.
பிரித்தானிய பத்திரிகை ஒன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரவு உணவு மேசையில் தொலைபேசியை பயன்படுத்துவதற்கும் பில்கேட்ஸினால் தடை செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ்சிற்கு 20, 17 மற்றும் 14 வயதுடைய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பிரித்தானியாவின் மிரர் பத்திரிகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பில் கேட்ஸ் எளிமையாக பங்கேற்றிருந்தார். இதன்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் 10 டொலர் பெறுமதியிலான கெசிகோ கடிகாரம் என அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
Average Rating