நெடுஞ்சாலையில் காரை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற லொறி: பரபரப்பு வீடியோ..!!
Read Time:1 Minute, 24 Second
அமெரிக்காவில் கார் ஒன்றை லொறி வெகுதூரம் இழுத்துச் சென்ற சம்பவம் வீடியோவாக இணையதளத்தில் பரவி வருகிறது.
கலிஃபோர்னியா மாகாண நெடுஞ்சாலையிலே இந்த விபத்து நடந்துள்ளது. குறித்த நெடுஞ்சாலையில் கேரட்டுகளை ஏற்றிச் சென்ற லொறிஅவ்வழியாகச் சென்ற ஒரு காருடன் உரசியதில் கார் லொறியின் பின் பகுதியில் மாட்டிக்கொண்டுள்ளது..
ஆனால் லொறியில் கார் சிக்கிக்கொண்டிருப்பதை உணராமல் லொறி ஓட்டுநர் தொடர்ந்து சென்று கொண்டிருந்துள்ளார். பின்னால், வந்த கார் ஓட்டுநர் குறித்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கார் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அதன் ஓட்டுநர் கடந்து சென்ற காரில் இருந்தவர்களிடம் உதவி கோரியுள்ளார்.இதையடுத்து நிலைமை லொறி ஓட்டுநருக்கு உணர்த்தப்பட்டு கார் விடுவிக்கப்பட்டுள்ளது.
Average Rating