ஒன்பதாம் ஆண்டில் கற்கும் மாணவிக்கு தந்தையான 13 வயது சிறுவன்..!!

Read Time:3 Minute, 17 Second

7214-kerala-boy-becomes-father-at-131011984428இந்திய கேரள மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் குழந்தைக்கு 13-வயது சிறுவன் தந்தையான வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுபோன்ற சம்பவம் கடந்த 2 மாதத்துக்குள் 2-வது முறையாக நடந்துள்ளது.

இது குறித்து கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் போலீசர் தரப்பில் கூறப்படுவதாவது-

“கடந்த வாரம் அரசு மருத்துவமனையில் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றதில், பத்தனாபுரத்தைச் சேர்ந்த 15வயதான 9-ம் வகுப்பு முடித்துள்ள சிறுமி, 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

தனது பெற்றோர்களிடம் தனக்கு தொடர்ந்து வயிறு வலி இருப்பதாக அந்த சிறுமி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்தபோது, அந்த சிறுமி முழுமையாக 5 மாத கர்ப்பணியாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்ததன் பெயரில் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினோம்.

அப்போது, மங்களூருவில் இருக்கும் தனது உறவுக்கார 8-ம் வகுப்பு படிக்கும் 13-வது சிறுவன்தான் தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் என அந்தசிறுமி தெரிவித்தார்.

இதையடுத்து, மங்களூருவில் உள்ள அந்தசிறுவனின் குடும்பத்தாருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தோம். அப்போது, அந்த சிறுவன், 9-ம் வகுப்புபடிக்கும் உறவுக்கார சிறுமியிடம் உறவு வைத்து இருந்ததை ஒப்புக்கொண்டான்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவன், கர்ப்பமான அந்த சிறுமி இருவரையும் கொல்லம் நீதிமன்றில் ஆஜர்படுத்தினோம். அவர் விசாரணை நடத்தியபின், இருவருக்கும் ஜாமீன் அளித்து அவர்களின் பெற்றோருடன் செல்ல அனுமதித்தார்.

மேலும், மருத்துவர்கள் தரப்பில் “ சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், சிறந்த மருத்துவமனையில் சேர்த்து, பிரசவம் பார்க்கும்படி” அறிவுரை கூறினர். மேலும், சிறுவனின் டி.என்.ஏ.வை எடுத்து ஆய்வு செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இதேபோல எர்ணாகுளத்தில் 13-வயது சிறுவன் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் 18 வயதாகியும் முத்தமிடாதது, உடலுறவு வைத்துக் கொள்ளாதது குற்றமா?..!!
Next post வனமகனில் ஜெயம் ரவிக்கு வசனங்களே கிடையாதாம்..!!