முகப்பரு தொல்லை இனி இல்லை..!!

Read Time:3 Minute, 33 Second

beauty_neem_splபெரும்பாலான பெண்களின் அழகைச் சிதைப்பது முகப்பருக்கள்தான். இவை வராமல் தடுப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும்.

முகத்தில் எண்ணை வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பாக நீரில் முகத்தை கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

முகப்பருக்கள் பல வகைகளில் தோற்றம் அளிக்கின்றன. இவற்றை மிக எளிதாக நீக்கி விடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேன்டியது இதுதான்.

கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.

முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயன தன்மை இருக்கிறது.

அது பலரது முகத்திற்கும் கேடு விளைவித்து விடும். அதுபோல எலுமிச்சம் பழ சாற்றை அரைத்து முகத்தில் தடவ கூடாது.

ரத்த சந்த பவுடர் கடைகளில் கிடைக்கும். அதனை பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

3 மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது.
முகத்தில் பருக்கள் பெருமளவு உண்டாகி விட்டால், அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அளிப்பது அவசியம்.

சில பெண்கள் முகப்பருவை கிள்ளி விடுவது, முரண்பாடான அழகு சாதனங்களை பயன்படுத்துவது, எலுமிச்சை பழத்தை முகத்தில் தேய்ப்பது, போன்றவைகளால் முகத்தை ரணமாக்கி விடுகிறார்கள்.

அதிகமான வெப்பத்தால் நம் உடலில் உள்ள தண்ணீர் மிக வேகமாக ஆவியாகி உலர்ந்து விடுகிறது. இதனால்தான் நாம் சீக்கிரம் சோர்ந்து போகிறோம். இதை ஈடுகட்ட தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
கோடையில் தினமும் 2 தடவை குளிக்க வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் அடிக்கடி முகம் கழுவினால் களைப்பு நீங்குவதோடு முகத்தில் உள்ள எண்ணைப் பசையும் நீங்கும்.

அப்படியும் சருமம் உலர்ந்திருப்பது போல் தோன்றினால் மாய்சரைசர் தடவலாம். வெயிலில் செல்வதற்கு முன் “சன்ஸ்கிரீன்” லோஷன் தடவினால் சருமம் பாதிக்கப்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த விஷயத்தில் அனுபவம் இல்லையா?… இத படிச்சிட்டு பட்டைய கிளப்புங்க…!!
Next post டிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மாணவியை அந்த டிரைவர் செய்த காரியம் இருக்கே.?!!