தனுசுடன் நடிக்கும் கனவு நனவாகி விட்டது: ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Read Time:1 Minute, 49 Second

201704261451557312_My-dream-of-act-with-dhanush-comes-true-says-Aishwarya_SECVPFஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுசுடன் ‘வடசென்னை’ படத்தில் நடித்து வருகிறார். கவுதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்‘ படத்துக்கும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

“வடசென்னை’ படத்தில் குப்பத்து பெண்ணாக நடிக்கிறேன். ஏற்கனவே இதுபோன்ற வேடத்தில் நடித்திருப்பதால் இதில் அதைவிட மாறுபட்ட நடிப்பை கொடுத்து வருகிறேன்.

இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தனுசுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.

‘துருவநட்சத்திரம்‘ படத்தில் நடிக்கிறேன். இது விக்ரம் நடிக்கும் படம் என்பது மட்டும்தான் தெரியும். எனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை டைரக்டர் சொல்லவில்லை.

இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ரித்துவர்மா நடிக்கிறார். எங்களில் யார் விக்ரம் ஜோடி என்பது எனக்கு தெரியாது. எப்போதுமே திறமையான நடிப்பை காட்ட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.

டூயட்பாடும் வேடம் வேண்டும் என்று இயக்குனரிடம் சொல்வதில்லை. அழுத்தமான வேடத்தில்தான் நடிக்க விரும்புகிறேன். இந்த படத்திலும் கவுதம்மேனன் எனக்கு அழுத்தமான வேடம் வைத்திருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1990 களின் நடிகை தேவயானி தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?..!! (வீடியோ)
Next post முதலிரவில் என்ன நடக்கும்? ஒரு வித்தியாசமான சர்வே..!!