நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம்: கேத்தரின் தெரசா..!!

Read Time:2 Minute, 8 Second

201704261434403840_Actress-to-be-looks-good-says-Catherine-Tresa_SECVPFஆர்யாவுடன் கேத்தரின் தெரசா நடித்து வெளியாகி உள்ள ‘கடம்பன்’ படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. இதுகுறித்து கேத்தரின் தெரசா கூறுகிறார்…

“தமிழ், தெலுங்கில் எத்தனையோ படங்கள் நடித்துவிட்டேன். கடம்பன் மாதிரி ஒரு படத்தில் நடித்தது இல்லை. இந்த மாதிரி கஷ்டப்பட்டதும் இல்லை. சில நாட்கள் நடித்த எனக்கே இவ்வளவு பிரச்சினை. ஆனால் நிஜவாழ்க்கையில் மலையில் காட்டில் வாழும் பெண்களை நினைத்து பார்த்தேன். அவர்கள் எவ்வளவு மன உறுதி மிக்கவர்கள், அவர்களுக்கு என் சல்யூட்.

ஆர்யாவுடன் நடித்தது நல்ல அனுபவம். ஆர்யா ஸ்வீட் பெர்சன். படப்பிடிப்பு தளத்தில் அவரும் உயிரை கொடுத்து வேலை செய்து இருக்கிறார்.

அடுத்து விஷ்ணுவுடன் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறேன். என்னுடன் நடித்த பல நடிகர்கள் என்னை பாராட்டியிருக்கிறார்கள்.

நடிகைகளுக்கு உடல் அமைப்பு முக்கியம். நான் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்கிறேன். துரித உணவு வகைகளை சாப்பிடமாட்டேன். ஸ்வீட்டுக்கும் தடா. இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகமாகிறது. இது தவறு. பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். நான் துபாயில் வளர்ந்தவள். அந்த மாதிரி இங்கேயும் பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் வர வேண்டும்”.

என்று கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: மருதங்கேணி மக்களை நோக்கிய வசை..!! (கட்டுரை)
Next post உலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு..!! (வீடியோ)