இந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து..!!

Read Time:2 Minute, 6 Second

201704261056174288_Hindi-actor-Farhan-Akhtar-Divorce_SECVPFஇந்தி நடிகர் பர்ஹான் அக்தருக்கும், அதுனா பாபனி என்பவருக்கும் கடந்த 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சாக்கியா, அகிரா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பர்ஹான் அக்தர்- அதுனா பாபனி தம்பதியின் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிய முடிவு செய்தனர். அதன்படி, விவாகரத்து கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி மும்பை பாந்திரா குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இருவருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், இருவருக்கும் ஒருமித்த முடிவு ஏற்படும் வண்ணம், 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அவகாசம் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பர்ஹான் அக்தரும், அவரது மனைவி அதுனா பாபனியும் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி எம்.எம். தாக்கரே தீர்ப்பு விவரத்தை அறிவித்தார்.

அதன்படி, இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின்பேரில், விவாகரத்து வழங்கி உத்தரவிட்டார். மேலும் குழந்தைகள் இருவரும் தாயாரின் பராமரிப்பில் இருப்பார்கள் என்றும், அவர்களை பார்க்க பர்ஹான் அக்தருக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த புத்திசாலி பெண் மரம் ஏறும் அழகைப் பாருங்கள்…!! (வீடியோ)
Next post சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை..!!