கணவனை கொன்றது ஏன்? கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்- மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்..!!

Read Time:5 Minute, 31 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது எதற்காக என்பது குறித்து மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3½ வயதில் நித்தீஷ் என்ற குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று சிங்காரம் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி கதறிய அழுதுள்ளார்.

இதனை அருகில் இருப்பவர்கள் நம்பினாலும், பொலிசாருக்கு சத்யாவின் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான் எங்களது கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலைக்கு சென்றேன். அப்போது எனக்கும், அதே செங்கல் சூளையில் கூலிவேலை செய்த புதுப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.

எனது கணவர் வேலைக்கு சென்றவுடன், ரவியை வீட்டிற்கு வரவழைப்பேன். வீட்டில் இருவரும் சந்தோஷமாக இருப்போம்.

ரவியின் மூலம் நான் கர்ப்பமானேன், தற்போது எனக்கு 3½ வயதில் நித்தீஷ் என்ற மகன் உள்ளான்.

ரவி எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இவர்கள் மூலமாக எனது கணவர் சிங்காரத்துக்கும் தெரிந்து விட்டது.

இதனால் எனது கணவர் என்னை கண்டித்தார். இனிமேல் செங்கல் சூளைக்கு செல்லக்கூடாது, ரவியுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது, வீட்டிற்கு அழைத்து வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இந்த நிலையில் 24-ந் தேதி(நேற்று முன்தினம்) இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சிங்காரம், ரவியுடன் கள்ளக்காதல் வைத்திருப்பது தொடர்பாக என்னை ஆபாசமாக பேசினார்.

உடனடியாக நான், ரவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, எனது கணவர் அடிக்கடி என்னை திட்டுகிறார். எனவே நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்றேன்.

அதற்கு ரவி, நீ ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். நாம் இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். நமக்கு இடையூறாக உள்ள சிங்காரம் தான் சாக வேண்டும். எனவே நாம் இருவரும் சேர்ந்து சிங்காரத்தை கொலை செய்து விடலாம் என்றார்.

இதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். உடனே ரவி, உன் கணவர் தூங்கியவுடன் எனக்கு செல்போன் மூலமாக தகவல் கொடு. உடனடியாக வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

எனது கணவர் சிங்காரம் இரவு 10.30 மணிக்கு தூங்கினார். உடனே நான், ரவிக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தேன். உடனடியாக ரவி எனது வீட்டிற்கு வந்தார். இதையடுத்து மாடு கட்டுவதற்காக வைத்திருந்த கயிற்றால் சிங்காரத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

பின்னர் சிங்காரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அனைவரையும் நம்ப வைக்க இருவரும் முடிவு செய்தோம். அதற்காக ஏற்கனவே ரவி, விவசாய பயிர்களுக்கு தெளிப்பதற்கான மருந்தை(விஷம்) வாங்கி வந்திருந்தார். அதனை சிங்காரத்தின் உடல் முழுவதும் தெளித்தோம். பின்னர் ரவி, அங்கிருந்து சென்று விட்டார்.

மறுநாள் காலையில் எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினேன். இதனை எங்கள் கிராம மக்கள் நம்பி விட்டார்கள், ஆனால் பொலிசார் நம்பவில்லை.

இதனால், பொலிசார் வசம் மாட்டிக்கொண்டேன் என கூறியுள்ளார். தற்போது கள்ளக்காதலன் ரவியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா சாலையில் இளம் பெண் செய்த அதிர்ச்சி செயல்: பகீர் வீடியோ..!!
Next post மாதுளம் பழத்துடன் எலுமிச்சை சாறு: கட்டாயம் குடியுங்கள்..!!