மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்..!!
மலரே நின்னே கானாதிருந்தால் என்று படித்ததும், மொழி தெரியவில்லை என்றாலும் பாடலை மட்டும் நன்றாக பாடிவிடுவார்கள் தமிழ் சினிமா இளைஞர்கள். பாடல் மட்டும் இல்லை படம் முழுவதும் ரசிகர்களுக்கு மனப்பாடம்.
இளைஞர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மலர் டீசர் எப்போது தமிழுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் பலர்.
இந்நிலையில் மலர் டீச்சர் சாய் பல்லவி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.
ஆனால் முன்பு வந்த தகவல்படி, மலையாளத்தின் ஹிட் படமான சார்லி படத்தை ஏ.எல். விஜய் தமிழில் சாய் பல்லவி வைத்து இயக்குவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெண்களை மையப்படுத்திய ஒரு புது கதையாம். மற்றபடி படத்தை பற்றி இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
Average Rating